தமிழ்நாடு

தீபாவளியையொட்டி மதுக்கடைகளில் அலைமோதியது கூட்டம்

தீபாவளியையொட்டி மதுக்கடைகளில் அலைமோதியது கூட்டம்

Rasus

தீபாவளி காரணமாக நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

பட்டாசு, பலகாரத்திற்காக தீபாவளிக்கு ஏங்குபவர் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் டாஸ்மாக் கடைக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள் இருக்கின்றனர். சென்னையில் தீபாவளி காரணமாக நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான மதுக்கடையில் மாலை நேரத்தில் பெருமளவில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். சில கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தும், சில கடைகளில் ஒருவரை ஒருவர் முந்திச் சென்றும் மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மது வகைகளின் விலை அண்மையில் உயர்த்தப்பட்டபோதிலும் அதன் விற்பனை அதிகரித்தே இருந்தது. இதனிடையே தங்கள் கருத்தை கேட்காமல் அரசு விலையை உயர்த்திவிட்டதாக மதுப்பிரியர்கள் கூறினர்.

தமிழகத்தில், வழக்கமான நாட்களில், 70 முதல் 85 கோடி ரூபாய் அளவில் மதுவிற்பனை நடப்பபதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முதல் நாள், 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்த நிலையில், கூட்டம் அலைமோதிய தீபாவளி நாளில் மதுவிற்பனை விவரம் இன்னும் தெரியவரவில்லை.