தமிழ்நாடு

குரங்கணி தீ விபத்துக்கான ஆதாரங்களை கொடுக்கலாம் - அதுல்ய மிஸ்ரா

webteam

குரங்கணி தீ விபத்து குறித்த ஆதாரங்கள் இருந்தால்  நேரில் சந்தித்து வழங்கலாம் என விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா  கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணியில் கடந்த 11 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக தமிழக அரசால் நியமிக்கபட்ட விசாரணை அதிகாரி இன்று மதுரை விமானநிலையம் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் குரங்கணி தீ விபத்து குறித்து இன்று மாலை தேனியில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், நாளை காலை குரங்கணி மலை கிராமம் சென்று அங்கிருந்து காட்டு தீ ஏற்பட்ட குரங்கணி மலைக்கு சென்று பார்வையிட உள்ளதாகவும் கூறினார். 

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புபணியில் ஈடுபட்டவர்கள், தீ விபத்து குறித்து விளக்கமளிக்க முன் வருபவர்கள்  என்னை நேரில் சந்தித்து விளக்கமளிக்கலாம். விசாரணை அலுவலகமாக தற்போதைக்கு குரங்கணி பஞ்சாயத்து அலுவலகம் செயல்படும் என்றும் அங்குவந்து தீ விபத்து குறித்து வீடியோ , போட்டோ , ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரம் வைத்திருப்போர் என்னை சந்தித்து அளிக்கலாம் என தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் விளக்கமளிக்க விரும்பினால், விளக்கமளிக்கலாம் அதனை ஏற்றுகொள்ளப்படும் என தெரிவித்தார் .