தமிழ்நாடு

கப்பற்படை கண்காட்சியைக் காண குவியும் மக்கள்

கப்பற்படை கண்காட்சியைக் காண குவியும் மக்கள்

webteam

இந்தியக் கப்பற்படை கண்காட்சியைக் காண இன்று சென்னை தீவுத்திடலில் ஏராளமானோர் குவிந்துள்ள நிலையில், போர்க் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட நாளை வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவக் கண்காட்சியை நண்பகல் ‌வரை ஒன்றரை லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ராணுவ தளவாட கண்காட்சியின் கடைசி நாளான இன்று பொதுமக்கள் பார்ப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கண்காட்சியில் மக்களை கவரும் வகையில் விமானப்படை, ராணுவத்தின் சாகங்கள் நடைபெற்றது. மேலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் ரக பீரங்கிகளின் சாகசம் மற்றும் தணுஷ் உள்ளிட்ட ஏவுகணைகளை மக்கள் பார்த்து ரசித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாகச நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு வியந்தனர். நண்பகல் வரை ஒன்றரை லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.

இந்திய கப்பற்படையின் சயாத்ரி, ககேத்திரா, சுமித்ரா, ஹராவத் உள்ளிட்ட நான்கு போர்க் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட நாளை வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்காக காலை 8 மணி முதல் பொதுமக்கள் தீவுத்திடலில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற வேண்டும். அதைதொடர்ந்து தீவுத்திடலில் இருந்து  12 பேருந்துகள் மூலம் பொதுமக்கள் சென்னை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கப்பல்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் நாளாக இன்றும் காலை 8 மணி முதல் தீவுத்திடலில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்துள்ளனர்.