தமிழ்நாடு

கொடைக்கானலில் தொடங்கிய பேரிக்காய் சீசன்

கொடைக்கானலில் தொடங்கிய பேரிக்காய் சீசன்

webteam

கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சீசன் துவங்கி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், கோடை காலம் முடிந்து, தென்மேற்கு பருவமழை துவங்கும் குளிர்ச்சியான பருவ காலத்தில், ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் பழ சாகுபடி துவங்கும். அதன்படி தற்பொழுது தென்மேற்கு பருவமழைக்காலத்தின் அறிகுறிகள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தென்படத்துவங்கி, பேரிக்காய் சீசனும் துவங்கியுள்ளது.

வால் பேரி, நாட்டு பேரி, முள் பேரி என பல வகை பேரிக்காய்களின் அறுவடை துவங்கியுள்ளது. நாட்டு பேரிக்காய் கிலோ 40 ரூபாய்க்கும், வால் பேரி கிலோ 50 ரூபாய்க்கும், முள் பேரி கிலோ 60 ரூபாய் என, சீரான விலையில் விற்கப்படுவதாக பேரிக்காய் விவசாயிகள் கூறுகின்றனர்.

இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கத்துவங்கும் பொழுது, விலை குறைய வாய்ப்புள்ளதாகவும், கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் விலை மேலும் கடுமையாக வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.