திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் சிலர் மது அருந்தும் காட்சிகள் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. முறையாக கண்காணிக்காததால் மதுபானங்கள், புகையிலைப் பொருட்கள் மருத்துவமனைக்குள் தடையின்றி கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.
குடிபோதையில் சில நோயாளிகள், மக்கள் நடந்து செல்லும் பாதையிலேயே சிறுநீர் கழிக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. ஒரு சில நோயாளிகள் இவ்வாறு செய்வதால், மருத்துவமனைக்கு வரும் அனைவருமே சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை மருத்துவமனை நிர்வாகம் முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.