தமிழ்நாடு

மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்: தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம்

மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்: தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம்

webteam

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால் உள்நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் பெண்களும் குழந்தைகளும் போர்வை விரித்து அதில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். கொசுக்கடியால் நோயாளிகள் அவதிப்படுவதாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஓமலூர் அருகிலுள்ள கிராமங்களில் செலிவியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், துணை சுகாதார நிலையங்கள் செயல்படாத நிலை உள்ளது என்றும் எனவேதான் ஓமலூர் மருத்துவமனைக்கு அதிகளவில் நோயாளிகள் வருவதாகவும் கூறப்படுகிறது.