பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அதிகாலையிலிருந்தே ஆயிரக்கணக்கானோர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்ததால் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் தமாதம் ஏற்பட்டது. ஊழியர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். இதையடுத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், ஒரே நேரத்தில் முன்பதிவு செய்யாமல் நூற்றுக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு வந்ததால் பலர் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.
முன்பதிவு செய்த பேருந்துகளும் உரிய நேரத்திற்கு வரவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க உதவ வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.