சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பயணிகள் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர மளிகைக் கடைகள், காய்கறிக்கடைகள், பலசரக்கு கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் 50% பணியாளர்களை மட்டும் அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.