தமிழ்நாடு

‘கிளி’ யாருக்குச் சொந்தம்..? காவல் நிலையம் சென்றது வழக்கு..!

‘கிளி’ யாருக்குச் சொந்தம்..? காவல் நிலையம் சென்றது வழக்கு..!

Rasus

உத்தரப் பிரதேசத்தில் கிளி யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னைக்கு தீர்வு காண இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காவல்நிலையம் சென்றுள்ளனர்.

ஹரித்வாரில் வசிக்கும் ராஜ்வீர் என்பவரின் கிளி கடந்த ஒராண்டுக்கு முன் காணாமல் போனது. பல இடத்தில் தேடியும் எந்தப் பலனுமில்லாத நிலையில் அவர் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தற்செயலாக அவரது தோழியான முஸ்கான் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சியடைந்தார். காரணம் அவர் செல்லமாக வளர்த்த கிளி, முஸ்கான் வீட்டில் வளர்க்கப்பட்டு‌ வந்தது.

தனது முன்னாள் எஜமானரை அடையாளம் கண்ட கிளி அவரின் பெயரை சொல்லி அழைத்துள்ளது. இதனால் மனம் உருகிய ராஜ்வீர் தனது கிளியை திரும்ப அளிக்கும் படி முஸ்கானிடம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் தஞ்சமடைந்துள்ள கிளி தனக்குத்தான் சொந்தம் என முஸ்கான் வாதிட்டார். நீண்ட வாக்குவாதத்துக்குச் சென்ற இந்தச் சண்டை, பிரம்புரி காவல்நிலையத்தை அடைந்தது.

காவலர்கள் இரு குடும்பத்தினரை சமாதானப்படுத்த பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனேதும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜ்வீர் மற்றும் முஸ்கான் குடும்பத்தினர் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வரும் வரை கிளி காவல்நிலையத்தில் இருக்கட்டும் எனக் கூறி அனுப்பிவைத்தனர்.