பொது வாழ்க்கையில் முதன் முறையாக, அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமது மனைவியுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு நாள் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மனைவி விஜயலெட்சுமி பங்கேற்றார். கணவரும், முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் விழா மேடையில் அமர்ந்து நிகழ்வுகளை அவர் கண்டு களித்தார்.
தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.