தமிழகத்தில் கட்டுமானப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வைத் தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமானப்பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருவதாக தகவல் வருகிறது.
ஊரடங்கிற்கு பின் கட்டுமானப்பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொருட்கள் பதுக்கப்பட்டு அதன் காரணமாக செயற்கையான விலையேற்றம் உருவாகியிருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டறிந்து போக்குவதிற்கான வழிமுறைகளை ஆராய்ந்து விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமானப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.