பன்னீர்செல்வத்தின் வேலை மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக அழிந்துவிட்ட கட்சி என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து அபத்தமானது, தவறானது என கண்டனம் தெரிவித்தார்.
பெரியாரின் கொள்கைகளின் படி ஆட்சி நடத்துகிறது அதிமுக என்றும், திராவிட பாரம்பரியத்தின் பெரும்பான்மையான கட்சி அதிமுகதான் என்றும் கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து திமுகவில் இணைந்துள்ள நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்திருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்தார்.
அதிமுகவுக்கு அரசியலில் நிரந்தர எதிரி திமுகதான் எனவும் அவர் கூறினார். பன்னீர்செல்வத்தின் வேலை மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் என்றும், விளம்பரம் தேடுவதற்காகவே ஓபிஎஸ் அணியினர் ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.