தமிழ்நாடு

பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் 12 ஆக உயர்வு

பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் 12 ஆக உயர்வு

webteam

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்பி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பன்னீர்செல்வத்துக்கு மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை இதுவரை 12 ஆக உயர்ந்துள்ளது.