சசிகலாவின் பலம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு நன்கு தெரியும் என பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
அதிமுக, திமுக கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் அதிமுக தரப்பில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக 30 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில் 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று பாஜகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி “அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கிறது. சசிகலா, தினகரனின் அரசியல் பலம், பலவீனம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு நன்றாக தெரியும். 2 பேரையும் சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.” எனத் தெரிவித்தார்.