தமிழகத்தின் புதிய வருவாய் ஆணையராக பணீந்தர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் வருவாய்த்துறை ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சென்னை மாநகர கொரோனா தடுப்பு அதிகாரி பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வந்தார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளராக அவர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து வருவாய்த்துறை ஆணையர் பொறுப்பு பீலா ராஜேஷுக்கு சென்றது. ஆனால் பீலா ராஜேஷ் அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வருவாய் ஆணையராக பணீந்தர ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.