தமிழ்நாடு

பல்லவன் - பாண்டியன் கிராம வங்கிகள் விரைவில் இணைப்பு

பல்லவன் - பாண்டியன் கிராம வங்கிகள் விரைவில் இணைப்பு

webteam

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் செயல்படவுள்ளது.

வாராக்கடன் பிரச்சினையால் இந்திய பொதுத்துறை வங்கிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வங்கிகளை மறுகட்டமைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்படும் பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் செயல்படவுள்ளது. 

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியின் சார்பு வங்கியாக பல்லவன் கிராம வங்கி உள்ளது. மற்றொரு பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பு வங்கியாக பாண்டியன் வங்கி செயல்படுகிறது. இந்த இரண்டு வங்கிகளும் அடுத்த நிதியாண்டான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒன்றிணைந்து, தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் செயல்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 முதல் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்றும் தெரிகிறது.