தமிழ்நாடு

பாலாற்றில் வெள்ளம்: 15 கிராமம் தவிப்பு

பாலாற்றில் வெள்ளம்: 15 கிராமம் தவிப்பு

webteam

வேலூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்ததால்‌ 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழை மற்றும் அம்மாநில அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் பாலாற்றில் கலக்கிறது. அந்த தண்ணீர் கரையோர பகுதிகளில் புகுந்துள்ளது. விருஞ்சிபுரம் பகுதியில் உள்ள தரைபாலம் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக‌ 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவதிபட்டு வருகின்றனர். கரைக்கு எதிர்புரம் உள்ள கிராமத்தினர் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி வேலூர் மற்றும் காட்பாடிக்கு வந்து செல்கின்றனர்.