பழனி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் அதிர்ச்சி. பழனியிலிருந்து வேப்பன் வலசுக்கு சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று சாக்கடையில் விழுந்தது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்தில் அலறினர்.