தமிழ்நாடு

பழனி துப்பாக்கிச் சூடு: காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பழனி துப்பாக்கிச் சூடு: காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

kaleelrahman

பழனியில் சர்வ சாதாரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிலப் பிரச்னை காரணமாக தொழிலதிபர் நடராஜன் என்பவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுப்ரமணி மற்றும் பழனிச்சாமி ஆகியோரை சுட்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.


இருவரையும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியனின் உடலில் இருந்து சுமார் 3 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தோட்டா அகற்றப்பட்டது.


ஆனால் தோட்டா குடல் பகுதியில் ஏற்படுத்திய பெறும் காயத்தால் முன்னதாகவே ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை அளிப்பதில் சவால் ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜன் மீது போலீசார் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.