தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் டிச.19இல் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தம் - என்ன காரணம்?

PT

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் ஒருநாள் மட்டும் ரோப் சேவை நிறுத்தம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக சொல்லப்படும் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு வரும் பக்தர்கள், படி பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை மூலமாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், ஆண்டிற்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

அந்தவகையில் ரோப்கார் சேவை நாளை மறுநாள் (19-12-22) மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு புதிய கம்பி வடம் பொருத்தப்படும் எனவும், மேல் ரோப்கார் நிலையத்தில் சாப்ட்டுகள் மற்றும் பெட்டிகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்பாதை, மின் இழுவை ரயில் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.