தமிழ்நாடு

பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் பாஜகவுக்கு கொடுக்க வேண்டும்:அண்ணாமலை

பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் பாஜகவுக்கு கொடுக்க வேண்டும்:அண்ணாமலை

Veeramani

பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக சார்பில் பல மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற வேல்யாத்திரையில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை “பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும். அதுதான் எங்கள் அன்பான வேண்டுகோள் ” என தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.