தமிழ்நாடு

கேட்டது மொபைல்போன், கிடைச்சது செங்கல் : இது ஆன்லைன் புரூடா

கேட்டது மொபைல்போன், கிடைச்சது செங்கல் : இது ஆன்லைன் புரூடா

webteam

சென்னை ஐஐடி மாணவி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மொபைல் போனுக்கு பணம் செலுத்தியிருந்த நிலையில், அவருக்கு செங்கல் பார்சலாக வந்ததால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி நித்திலா தேவி என்பவர், கடந்த 19ம் தேதி ஸ்நேப்டீல் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் மொபைல் வாங்குவதற்காக பணம் செலுத்தியுள்ளார். 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் 12 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்ததால் அதற்கான முழுத் தொகையையும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் நித்திலா தேவி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், நேற்று தனக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த அவர், அதில் செல்போனுக்கு பதிலாக செங்கல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பொருட்கள் வாங்குவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே ஏமாறுவதில் இருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுனர்கள். ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் போலீசார் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.