நாகை மாவட்டத்தில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், சில இடங்களில் வெள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் பாதிகப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் 3வது நாளாக பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் திருநகரி வாய்க்கால் உடைந்ததால், குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது.கடல் சீற்றத்தால் 5ஆவது நாளாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.