ஓணம் பண்டிகையை முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் பல வண்ணங்களால் அத்தப்பூ கோலமிட்டு சுற்றுலா பயணிகளை ஊழியர்கள் வரவேற்றனர்.
ஓணம் பண்டிகைக்கு 10 நாட்கள் முன்பிருந்தே வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, ஊஞ்சல் கட்டி மலையாள மொழி
பேசும் மக்கள் ஓணத்தை வரவேற்பர். அந்தமுறை படி, கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர்கள் இன்று
வாசலில் அத்தப்பூ கோலமிட்டிருந்தனர். ஓணம் ஊஞ்சலில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் இதனை பார்த்து மகிழ்ந்தனர்.