தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது என்ன?...

பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது என்ன?...

webteam

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக ஆசியர் சங்கம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சேட்டு கூறுகையில், செமஸ்டர் தேர்வு விடுமுறைக்குப் பின்னர் கல்லூரி இன்று திறக்கப்பட்டது. அப்போது 12 மணியளவில் சிலர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு கல்லூரிக்குள் நுழைய முயன்றனர். சம்பவத்தின் போது போலீசாரும் இருந்தனர். கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முயன்ற மாணவர்களிடம் அடையாள அட்டை தொடர்பாக சோதனையிடப்பட்டது. அவர்களில் சிலரிடம் கல்லூரியின் முறையான அடையாள அட்டை  இல்லை. எனவே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கல்லூரிக்குள் நுழைய முயன்றவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போது முதல்வர் காளிராஜுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. காயத்தைத் தொடர்ந்து அவர் ஓய்வு எடுத்து வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கல்வீச்சில் முதல்வர் காளிராஜின் கார் கண்ணாடியும் சேதமடைந்தது.