தமிழ்நாடு

 ''என் விமர்சனத்தை ராஜராஜ சோழன் ஏற்றிருப்பார்'' - பா.ரஞ்சித்

webteam

மாமன்னர் ராஜராஜ சோழன் உயிருடன் இருந்திருந்தால், தமது விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்து தாம் பேசியதை எந்தவொரு இடத்திலும் மறுக்கவில்லை எனக் கூறினார். ராஜராஜ சோழன் தற்போது உயிருடன் இருந்திருந்தால், தமது விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார் என்றும் அவர் பேசினார். 

ஒரு குறிப்பிட்டவர்களிடம் மட்டும் இங்கு ஏன் நிலம் உள்ளது? எங்களிடம் நிலம் ஏன் இல்லை? என ஆராய்ந்துள்ளதாக கூறிய பா.ரஞ்சித், தம் பேச்சு பிறரை கோபப்படுத்தி இருந்தால், தவறு எதிர்ப்பவர்களிடம் தான் உள்ளது, தம்மீது இல்லை என்றார். மன்னர் ராஜராஜ சோழன் குறித்து தவறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் பெற்றுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், இவ்வாறு பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.