P Chidambaram MK Stalin  x page
தமிழ்நாடு

திமுகவுடனான உறவுக்கு அடிபோடும் பாஜக.. மு.க.ஸ்டாலின் - ப.சிதம்பரம் சந்திப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்லப்பெருந்தகை இல்ல விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசியது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.

Prakash J

திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் சேர்ந்து அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது காங்கிரஸ். இருப்பினும் I-N-D-I-A கூட்டணியில் திமுகவை தொடர்ந்து தக்கவைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, தவெகவுடன் தொடர விரும்பும் காங்கிரஸ், தேர்தலுக்குப் பின்னர் தேசிய அளவில் I-N-D-I-A கூட்டணியில் திமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது.

கேரள மாநில அரசியலில் இடதுசாரிகளுடன் எதிரும் புதிருமாக செயல்பட்டாலும் டெல்லியில் அக்கட்சிகளுடன் இணைந்து பாஜகவை எதிர்க்கிறது. அதேபாணியில், ஒரேநேரத்தில் திமுக, தவெக ஆகிய இருகட்சிகளுடனும் உறவாட காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக எதிர்ப்பிலேயே திமுகவை தொடர்ந்து தக்கவைக்க காங்கிரஸ் மேலிடம் விரும்புவதை ப.சிதம்பரம், ஸ்டாலினுடனான சந்திப்பில் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. திமுகவுடனான உறவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலம் பாஜக காய் நகர்த்துவதாக கூறப்படும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஸ்டாலினை சந்தித்திருக்கிறார் ப.சிதம்பரம்.