சசிகலா முதல்வராகும் விவகாரத்தில், அதிமுகவும், தமிழக மக்களும், எதிரெதிர் திசையில் பயணிப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராவது பற்றி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழக முதலமைச்சர் இருக்கையை பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் அலங்கரித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தங்களது சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் முதலமைச்சராக பதவியேற்க இருப்பவரை கேள்விகேட்கும் உரிமை மக்களுக்கு இருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.