தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் விநியோகம் சீர்செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்சிஜன் கொண்டு செல்வதற்காக சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் வரவிருப்பதாகக் கூறினார்.