தமிழ்நாடு

சேலம் இரும்பாலை கழகத்தில் தயாராகிறது ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள்

Sinekadhara

சேலம் இரும்பாலை கழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகள் பல மணி நேரம் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சேலம் இரும்பாலை கழகத்தில் கொரோனா நோயாளிகளுக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் அமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சித் தவைர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்த கொரோனா மையத்திற்கு தேவையான சாலை வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக மேற்கொள்வதற்கான ஆலோசனைகளும் நடந்து முடிந்துள்ளன. சேலம் இரும்பாலை மற்றும் மேச்சேரி ஜேஎஸ்டபிள்யூ ஆலய நிர்வாகம் ஒருங்கிணைப்புடன் அமைக்கப்பட்டு வரும் இந்த சிகிச்சை மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.