திண்டுக்கல்லில் காளை மாடு முட்டியதில் அதன் உரிமையாளர் குடல் சரிந்து படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் புறவழிச்சாலையில் உள்ள ஐயர் மடம் என்ற இடத்தில் மணிவேல் என்பவர் தனது காளை மாட்டினை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது காளை மாடு திடீரென மிரண்டு மணிவேல் மீது சீறிப் பாய்ந்தது. மாடு முட்டியதால் மணிவேல் குடல் சரிந்து சுருண்டு கீழே விழுந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிவேலின் மகன் பூபதி, காளையிடம் போராடி தந்தையை மீட்டார். தந்தையை காப்பாற்ற மகன் காளையிடம் போராடி மீட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த மணிவேல் சிகிச்சைக்காக தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.