தமிழ்நாடு

மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு

மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு

webteam

ரயில்வே பணியிடங்களில் அதிக வெளிமாநிலத்தவர் இடம்பெற்றிருப்பது குறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக ஆவணம் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90 சதவிகிதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த தேர்வுகள் மூலம் 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதன் மூலம், அதில் தமிழகத்தை சேர்ந்த 10க்கு குறைவானவர்களுக்கே இடம் கிடைத்திருப்பதும் அறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ரயில்வேத்துறை, தேர்வில் அதிகளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்காகதே காரணம் என கூறியுள்ளது.