இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பணியிடங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சான்றிதழ் வழங்க வளமான பிரிவினரை நீக்க வருமானத்தை கணக்கிடும்போது ஊதியம், வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று ஏற்கனவே ஒன்றிய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.