பேச்சுவார்த்தையின் இலக்கணத்தை ஓ.பன்னீர்செல்வம் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், செய்தியாளர்கள் மத்தியில்தான் பரபரப்பு இருக்கிறதே தவிர நாடும் நடப்பும் அமைதியாகத்தான் இருக்கிறது. எந்தவித பரபரப்பும் இல்லை. சுமூகமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வழக்கு தொடர்பாக தெளிவான கருத்தினை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை என்பது இரு தரப்பும் அமர்ந்து பேசவேண்டுமே தவிர ஊடகங்களில் கருத்து வெளியிடுவது முறையான பேச்சுவார்த்தை ஆகாது என்றும், ஒ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தையின் இலக்கணத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.