தமிழ்நாடு

யார் யாரிடம் அசல் உரிமம் சரிபார்க்கப்படும்: காவல்துறை விளக்கம்

யார் யாரிடம் அசல் உரிமம் சரிபார்க்கப்படும்: காவல்துறை விளக்கம்

webteam

6 விதமான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓ‌ட்டுநர்களிடமே அசல் உரிமம் சரிபார்க்கப்படும் என போக்குவரத்து காவல் துறை விளக்கமளித்துள்ளது. 

இதன்படி, வாகனத்தில் அதிவேகமாக செல்வது, சிக்னலை மீறுவது, கைப்பேசியில் பேசியபடியே வாகனத்தை இயக்குவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்வது, சரக்குகளையோ அளவுக்கு அதிகமாக ஏற்றுவது ஆகிய 6 விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடமே அசல் உரிமம் சரிபார்க்கப்படும் என தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் தங்களின் அசல் உரிமங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் காவல்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது. ஹெல்மெட் அணியாதவர்கள், சீல் பெல்ட் அணியாதவர்களிடம் அசல் உரிமம் கேட்கப்படாது என்றும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.