வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்தான் என்று கருத்துத் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி துரைசாமி முன்பு இன்று வந்தது. அப்போது,வாகன சட்டப்பிரிவு 139இன் படி, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என நீதிபதி கூறினார். இது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்ற அவர், விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.