book fair
book fair pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை: மாற்றுத்திறனாளி பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்!

webteam

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தம்பட்டி கிராமத்ததைச் சேர்ந்தவர் சுகுணா (33). முடக்குவாதம் மற்றும் சதை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவரான இவருக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை நேரில் காண வேண்டுமென்பது ஆசையாக இருந்துள்ளது. இதனை அறிந்த புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள், சுகுணாவை ஆம்புலன்ஸ் மூலம் விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து சென்றனர். அவரை பள்ளி மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

suguna

எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள சுகுணா, வலைதளங்களில் கவிதைகள் எழுதி பல சான்றிதழ்களை பெற்றுள்ளார். ஆயினும் உடல் குறைபாட்டால் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்துள்ளார். இந்நிலையில் சுகுணாவின் ஆசைக்காக அவரை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து சென்றனர். மேலும் சுகுணாவை புத்தக அரங்குகள் ஒவ்வொன்றுக்கும் அழைத்துச் சென்று புத்தகங்களை பார்க்க வைத்தனர்.

இதைத் தொடர்ந்து புத்தகங்கள் மீதான சுகுணாவின் ஆசையைக் கண்ட பலரும் அவருக்கு புத்தகங்களை பரிசளித்து மகிழ்ந்தனர். புத்தகத் திருவிழாவுக்கு சுகுணா வருகை தந்ததன் மூலம் புத்தகத் திருவிழாவின் நோக்கம் நிறைவேறியதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.