தமிழ்நாடு

உடல் உறுப்பு மாற்றத்திலும் ஊழல் செய்யும் தமிழ்நாடு ? வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்

உடல் உறுப்பு மாற்றத்திலும் ஊழல் செய்யும் தமிழ்நாடு ? வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்

webteam

தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்திய நோயாளிகள் காக்க வைக்கப்படுவதாக ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.  மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக பெற்று அது தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்திய நோயாளிகள் புறக்கணிப்படுவதாகவும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு அதிக  முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் இந்திய நோயாளிகள் உறுப்புகளை பெற காத்திருப்பதாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைப்பெற்ற இதய  மாற்று அறுவை சிகிச்சையில் 25 சதவீதமும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 33 சதவீதம் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டினருக்கு மூன்று இதய மாற்று அறுவைசிகிச்சைகள்  நடைப்பெற்றுள்ளது.