தமிழ்நாடு

விஜிபி விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க காவல் ஆணையருக்கு உத்தரவு

கலிலுல்லா

விஜிபி பொழுதுபோக்கு மைய ராட்டின விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2016ஆம் ஆண்டு விஜிபியில் நிகழ்ந்த விபத்தில் தனது இளைய மகள் தலையில் பலத்த காயமடைந்து, பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில், காவல்துறை மோசமான விசாரணை நடத்தி விஜிபி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, டிஎஸ்பி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி ஒருவரை நியமித்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்த வழக்கை 12 வாரங்களில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.