நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நாளை (அக். 27ஆம் தேதி) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி.சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக 280 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விஜய்யின் தவெக மாநாட்டிற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக மாநாட்டு நுழைவுவாயில் பகுதியில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நெடுஞ்சாலையில் பேனர்கள் அமைக்கக்கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.