தமிழகத்தில் அரசு வாகனங்களில் உள்ள நீலநிறச் சுழல் விளக்குகளை உரிய அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிவப்பு மற்றும் நீல நிற விளக்குகளை அகற்ற உத்தரவிட்டு, மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
பொதுவாக நீலச் சுழல் விளக்குகள் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு தலைமை செயலாளர்கள், நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களின் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.