அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு pt web
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை.. அடுத்த 3 நாட்களுக்கு எங்கெல்லாம் ஆரஞ்சு அலெர்ட்?

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Rishan Vengai

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும். நவம்பர் 28, 29, 30 தேதிகளில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

மேலும் சென்னையில், நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

நவம்பர் - 28, இதேபோல், வரும் 28ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் - 29, தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

நவம்பர் - 30, அதேபோன்று, வரும் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளாது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.