தமிழ்நாடு

குன்னூருக்கு ஓபிஎஸ் திடீர் பயணம்

குன்னூருக்கு ஓபிஎஸ் திடீர் பயணம்

webteam

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நள்ளிரவில் திடீரென்று குன்னூர் வந்தார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு நேற்று இரவு அவர் திடீர் விசிட் அடித்தார். இதையடுத்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருடன் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் உடன் சென்றிருந்தார். 
திடீர் பயணம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பன்னீர்செல்வம் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.