அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பிலும் குழு அமைக்கப்படும் என அந்த அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் எம்பி தலைமையில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட இக்குழுவில் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கீரின்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி, கழக தொண்டர்களின் நலன் கருதியும், நாட்டு மக்கள் நலன் கருதியும் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் அமைக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் தரப்பிலும் குழு அமைக்கப்படும் என்றார். குழுவில் யார் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.