சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
தலைமை செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செம்மலை, மாஃபா பாண்டியராஜன், பொன்னையன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தேர்வு முறையை ரகசியமாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.