தமிழ்நாடு

இரட்டை இலைக்கு உரிமை கோரும் ஓபிஎஸ்: 6,500 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல்

இரட்டை இலைக்கு உரிமை கோரும் ஓபிஎஸ்: 6,500 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல்

Rasus

அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் கூடுதலாக 6 ஆயிரத்து 500 பக்கத்திற்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிகள் இணைவது குறித்து இருதரப்பினரிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் சொந்தம் கொண்டாடியதால் அவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதுதொடர்பான விசாரணைக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இருதரப்பினரும் அவகாசம் கோரியதால், இருதரப்பினருக்கும் ஜூன் 16-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவ‌காசம் வழங்கியுள்ளது.