தமிழ்நாடு

போனவர்கள் திரும்புவார்கள்: வைகை செல்வன்

போனவர்கள் திரும்புவார்கள்: வைகை செல்வன்

webteam

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கச் சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகை செல்வன், 7 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவினை மட்டுமே பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அவர் யாரோ கூறுவதைக் கேட்டு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் இன்று அழைப்பார் என்று எதிர்பார்க்கிறேம் என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களை விட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்துவருவது தொடர்பாக வைகை செல்வனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த வைகை செல்வன், போனவர்கள் விரைவில் திரும்ப வருவார்கள் என்று தெரிவித்தார்.