அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை நோக்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணியாக சென்று வருகின்றனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிமுக விதிகளில் திருத்தம் செய்ய ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் பொதுக்குழுவில் கட்சி விதிகளை திருத்தக்கூடாது எனவும் எழுப்பினர். பொதுக்குழு நடைபெறும் பகுதியில் சுமார் 2000 காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.