தமிழ்நாடு

குடியரசுத்தலைவரை சந்திக்க ஓபிஎஸ் அணி எம்பிக்கள் திட்டம்

குடியரசுத்தலைவரை சந்திக்க ஓபிஎஸ் அணி எம்பிக்கள் திட்டம்

webteam

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 12 எம்பிக்கள் ‌குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நாளை சந்திக்க உள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தலைமையிலான குழுவினர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளனர். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் புகார் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் கருதுவதாகவும் எனவே அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தார்.