தமிழ்நாடு

ஓபிஎஸ் தலைமையில் கையெழுத்து இயக்கம்

ஓபிஎஸ் தலைமையில் கையெழுத்து இயக்கம்

webteam

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இதற்கான கையெழுத்து இயக்கத்தை ஆதரவாளர்கள் மத்தியில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றக் கோரி தமிழகம் முழுவதுமுள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.